● எஸ். சிவமுருகன், பாலையம்பட்டி.

திருமணம் எப்போது நடக்கும்? தொழில் எப்போது சரியாக அமையும்?

7-3-2018 வரை சூரிய தசை ஆறு வருடம் முடிந்து இப்போது சந்திர தசை ஆரம்பம். இது பத்து வருடம். இதில் பத்து மாதம் தனது புக்தி 2019- ஜனவரி வரை. தனுசு லக்னம். 2-ல் குரு நீசம். 5-ல் ராகு- அதற்கு சனி, புதன், கேது பார்வை. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் பலமில்லை. அதனால் என்ன ஹோமம் செய்தாலும், எத்தனை கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செய்தாலும் எதுவும் உடனே நடக்க வழியில்லை. "சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே- நிற்பதா- நடப்பதா?' என்று ஒரு திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலை டி.ஆர். மகாலிங்கம் பாடிய கதைதான் உங்கள் நிலை! எப்போது நடக்கும்? எப்படி நடக்கும் என்று அந்த நவகிரகங்களே அறிவர்! நடக்கும்வரை பொறுமையாக இருப்பதே பரிகாரம்! முயற்சியை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

Advertisment

sivan

● சித்ரா அருணகிரி, திருச்சி.

என் மகன் ஸ்ரீகௌதம் பி.எச்.டி., படிப்பு முடித்துள்ளான். இனிமேல்தான் வேலை அமையவேண்டும். திருமணமாக வேண்டும். லக்னத்தில் ராகு இருப்பதால் தோஷம் என்கிறார்கள். ராகு தசை வேறு நடக்கிறது. தெளிவில்லாமல் தவிக்கிறோம்.

33 வயது நடக்கிறது. சுக்கிரன் நீசம்; சூரியன் நீசம்; குரு நீசம். முக்கியமான கிரகங்கள் எல்லாம் பலமிழந்து விட்டன. திருமணம், வாரிசு, தொழில், சம்பாத்தியம் எல்லாமே குழப்பம்தான்; பிரச்சினைதான். இதற்கு ஒரே தீர்வு- சூலினி துர்க்கா ஹோமம் உள்பட 16 விதமான ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். சுந்தரம் குருக்களைத் (செல்: 99942 74067-ல்) தொடர்புகொண்டு விசாரிக்கவும்.

● கயல், ஈரோடு.

Advertisment

என் மகன் கவின் பி.எஸ்.ஸி., NauticalScience- கடல் சார்ந்த படிப்பு படித்துள்ளான். அது சம்பந்தமாக அதே துறையில் வேலை கிடைக்குமா? எப்போது? உங்களுடைய வழிகாட்டுதல் அவசியம். திருமணம் எப்போது நடக்கும்?

மிருகசீரிட நட்சத்திரம், ரிஷப ராசி. அட்டமச்சனி நடக்கிறது. குரு தசை, சுக்கிர புக்தி நடக்கிறது. 31 வயது. திருமணம் 2020-க்குமேல்தான். அதன்பிறகுதான் அவர் படித்த துறையில் வேலை அமையும். மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம், பூஜை செய்யவும். அத்துடன் ஈரோடு பழைய ஸ்டேஷன் சாலையில் சீதாராம் சுவாமி என்று ஒரு ஆன்மிகப் பெரியவர் இருக்கிறார். அவரைச் சந்தித்து அருளாசி பெற்றால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். தொடர்புக்கு, செல்: 98433 11741. சனிக்கிழமை மௌனவிரதம் மேற்கொள்வார். மற்ற நாளில் சந்திக்கலாம்.

● மயில்வாகனன், தேனி.

தங்கள் கணிப்பு மனநிறைவைத் தருகிறது. எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?

துலா ராசி, விசாக நட்சத்திரம், விருச்சிக லக்னம். 53 வயது நடக்கிறது. 2015 முதல் ஏழு வருடம் கேது தசை. லக்னத்தில் கேது, ராகு, சனி. இவர்கள் எப்போதும் பிரச்சினைகளை உருவாக்குவார்கள். சந்தோஷக்குறைவு, திருப்தியற்ற நிலை, பொருளாதாரச் சிக்கல் ஆகியவற்றைக் குறிக்கும். தினசரி விநாயகர் வழிபாடு உத்தமம். விநாயகர் கவசம் என்று ஸ்தோத்திரம் உண்டு. "வளர்சிதையை பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க' என்று தொடங்கும். அதை வாங்கி தினசரி படிக்கவும். சதுர்த்தியன்று 21 முறை படிக்க (நேரம் ஒதுக்கி) எல்லா நன்மைகளும் உண்டாகும். ஒருமுறை பிள்ளையார்பட்டிக்குப் போய் அபிஷேகம், பூஜை செய்யவும்.

● ஆர். லட்சுமணன், சென்னை சேலையூர்.

Advertisment

என் மகள் ரோகிணி எம்.பி.பி.எஸ்., முடித்திருக்கிறாள். அவளுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? உத்தியோகம் அமையுமா? வரும் கணவரும் டாக்டராக அமைவாரா?

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னம். ராகு தசை நடக்கிறது. காரைக்குடி அருகில் வேலங்குடி வயல்நாச்சியம்மன் கோவிலில் சூலினி துர்க்கா ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம் உள்பட சுமார் 16 வகையான ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் டாக்டர் மாப்பிள்ளையே அமைவார். அரசு வேலையும் அமையும். திருமண வாழ்வும் ஆனந்தமாக அமையும். சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு தகவல் அறியலாம். (செல்: 99942 74067).

● ரா. உலகம்மாள் கடையநல்லூர்.

எனக்கும், தம்பிக்கும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலை என் தந்தையின் உடம்பைப் படுத்துகிறது. திருமணம் எப்போது நடக்கும்? தம்பிக்கு அரசு வேலை எப்போது கிட்டும்?

உலகம்மாளின் இப்படிப்பட்ட கேள்விக்கு ஏற்கெனவே இரண்டுமுறை பதில் கூறியுள்ளேன். பொழுது போகவில்லை என்பதற்காக திரும்பத் திரும்ப கேள்வி கேட்பதா? என் நேரத்தையும் வீணடித்து உங்கள் நேரத்தையும் வீணடிப்பதில் என்ன சந்தோஷம்?

முதலில் உலகம்மாள், ராமசாமி, சங்கர் மூவருக்கும் பிறந்த தேதி மட்டும் எழுதி- ஜாதகம் எழுதவில்லையே. அதிலும் எனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கேள்வி கேட்டு, அப்பா பெயர் ராமசாமி என்று எழுதியிருக்கிறீர்கள். படித்த பெண். 30 வயது ஆகிறது. ஜாதகம், தசாபுக்தி எழுதியனுப்பாமல் எப்படி பதில் சொல்லுவது? விவரம் போதாத பிள்ளையாக இருக்கிறாயே! பாவம்!